பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 68.11 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

பருத்தி காடு பைல் படம்
பவானி அருகே பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 68.11 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.இங்கு இரண்டாயிரத்து 568 மூட்டைகள் பருத்தி விற்பனைக்கு வந்திருந்தது. ஒரு கிலோ பருத்தி 75.89 ரூபாய் முதல் 81.19 ரூபாய் வரை ஏலம் போனது.
மொத்தம் 904.39 குவிண்டால் பருத்தி 68 லட்சத்து 11 ஆயிரத்து 209 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.
மேலும் பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 7.94 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது. இது குறித்து வேளாண் பொருட்கள் விற்பனை கூடக் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் கூறியதாவது:
இங்கு விற்பனைக்கு வந்த 9 ஆயிரத்து 229 தேங்காய்களில் சிறியவை 06.06 ரூபாய் முதல் 13.77 ரூபாய் வரை 92 ஆயிரத்து 194 ரூபாய்க்கும், 123 மூட்டை தேங்காய் பருப்பு கிலோ 100.69 முதல் 104.39 வரையில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 907 ரூபாய்க்கும்,
124 மூட்டைகள் நிலக்கடலை கிலோ 58.46 ரூபாய் முதல் 63.12 வரையில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 570 ரூபாய்க்கும் ஏலம் போனது.
7 மூட்டைகள் எள் கிலோ 73.29 ரூபாய் முதல் 81.69 ரூபாய் வரையில் 21 ஆயிரத்து 859 ரூபாய்க்கும், 34 மூட்டைகள் நெல் கிலோ 9.10 ரூபாய் முதல் 13.65 வரையில், 47 ஆயிரத்து 828க்கும்,
ஒரு மூட்டை ஆமணக்கு 47.18 ரூபாய் வீதம் ஆயிரத்து 746 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 289 மூட்டைகள் 157.66 குவிண்டால் எடையுள்ள வேளாண் விளை பொருட்கள் 7 லட்சத்து 94 ஆயிரத்து 104க்கு விற்பனையானது. 231 விவசாயிகள் பயன்பெற்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu