குமாரபாளையம் தனியார் கல்லூரியில் 80 படுக்கைகளுடன் கொரோனா வார்டு தயார்

குமாரபாளையம் தனியார் கல்லூரியில் 80 படுக்கைகளுடன் கொரோனா வார்டு தயார்
X

குமாரபாளையத்தில் தனியார் கல்லூரியில் 80 படுக்கை வசதி கொண்ட கொரோனா வார்டு தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் நோயாளிகளுக்கான கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குமாரபாளையத்தில் தனியார் கல்லூரியில் 80 படுக்கை வசதி கொண்ட கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.

குமாரபாளையத்தில் தனியார் கல்லூரியில் 80 படுக்கை வசதி கொண்ட கொரோனா வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், குமாரபாளையத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தினமும் பலர் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். தற்போது 55 பேர் பாதிப்புக்குள்ளாகி அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின் பேரில் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 80 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது. நோயாளிகளுக்கு தேவையான கழிப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு