குமாரபாளையத்தில் நாளை (7ம் தேதி) 8 பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்

தடுப்பூசி முகாம். (பைல் படம்)
இதுகுறித்து குமாரபாளையம் நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு கூறுகையில், நகராட்சி வார்டு வாரியாக அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.
அதன்படி,
1. நகராட்சி ஆரம்ப பள்ளி, சின்னப்பநாயக்கன்பாளையம். வார்டுகள் : 1,2,3,31,32,33.
2. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வார்டுகள்: 4,5,6,7.
3. ஜே.கே.கே. ரங்கம்மாள் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, விட்டலபுரி. வார்டுகள்: 8,9,10,11.
4. ஏ.வி.எஸ். பள்ளி, ஆனங்கூர் சாலை, வார்டுகள்: 12,13.
5 நகராட்சி நடுநிலைப்பள்ளி, நாராயண நகர், வார்டுகள்: 14,15,16,17
6. நகராட்சி நடுநிலைப்பள்ளி, மேற்கு காலனி. வார்டுகள்: 20,23,24.
7.நகராட்சி உயர்நிலைப்பள்ளி, புத்தர் தெரு, வார்டுகள்: 18,19,21,22,25.
8. ஜே.கே.கே. நடராஜா மண்டபம், கலைமகள் வீதி, வார்டுகள்: 26,27,28,29,30.
ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. தடுப்பூசி போடாத பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu