அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று
X

முன்னாள் அமைச்சர் தங்கமணி

அதிமுகவின் முன்னாள் அமமைச்சரும் குமாரபாளையம் எம்எல்ஏவுமான தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அதிமுக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் சட் டமன்ற உறுப்பினருமான தங்கம ணிக்கு கடந்த சில நாட் களாக கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் சோதனையின் முடிவு நேற்று வந்தது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட் டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவம னையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Tags

Next Story