கொரோனா கட்டுப்பாடு: சங்கமேஸ்வரர் கோவில் திருமுறைக்கழக நிகழ்ச்சி ரத்து

கொரோனா கட்டுப்பாடு: சங்கமேஸ்வரர் கோவில் திருமுறைக்கழக நிகழ்ச்சி ரத்து
X
கொரோனா கட்டுப்பாடுகளால், சங்கமேஸ்வரர் கோவிலில் திருமுறைக்கழக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

திருமுறைக்கழக 81வது ஆண்டு நிறைவு விழா, குமாரபாளையம் அருகே பவானி சங்கமேஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஜன. 5 முதல் ஜன. 14 வரை, 10 நாட்கள் தினமும் மாலை 06:00 மணி முதல் 09:00 மணி வரை நடைபெறுகிறது. ஜன. 5, 6ல் "ஆனைமுகனும், ஆஞ்சநேயனும்" எனும் தலைப்பில் கிருஷ்ண ஜகன்னாதன் சொற்பொழிவு நடைபெற்றது.

இதனிடையே, கொரோனா பரவலால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. அரசு உத்திரவின்படி ஜன. 7,8,9 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரம், ஜனவரி 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!