பள்ளிப்பாளையத்தில் பாதிப்பு குறைவு... நோய்த்தடுப்பு பணியில் குறைவில்லை!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில், கொரோனா பாதிப்பு சற்று குறைந்தபோதும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் தொடர்கின்றன.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளைத்தில் தற்போதைய சூழலில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் உள்ளது . எனினும், பள்ளிபாளையம் நகராட்சி வார்டுகளில், தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி ஊழியர்கள், தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, கிருமி நாசினி மருந்துகளை தெளித்து வருகின்றனர்.

இன்று காலை பள்ளிபாளையம் 11-வது வார்டு பெரிய காடு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி மருந்துகளை தெளித்தனர்.

அதேநேரத்தில் நகராட்சி அதிகாரிகள், அங்கிருந்த பொதுமக்களிடம் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே வரும் பொழுது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் வீட்டிற்குள் மீண்டும் செல்லும்போது சோப்பு கொண்டு கை கால்களை நன்றாக கழுவிய பிறகே வீட்டிற்குள் செல்ல வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.

Tags

Next Story
ai in future agriculture