குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள்

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள்
X

குமாரபாளையம் அரசு மருத்துவமனை.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தலைமை டாக்டர் பாரதி கூறுகையில், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் கொரொனோ வார்டில் கொரோனா நோயாளிகள் 2, 3, நோயாளிகள் தினமும் இருந்து கொண்டுதான் உள்ளனர். கொரானா சந்தேகத்தின் பேரில் அட்மிட் ஆகி, கொரோனா பரிசோதனை சான்றில் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர கவனம் செலுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது உள்ளவர்கள் சிகிச்சை பெற்று திரும்பும் முன், மற்ற நபர்கள் அட்மிட் ஆகிவிடுகின்றனர். முழுவதுமாக கொரோனா நோயாளிகள் இல்லை என்ற நிலை எதோ ஒரு நாளில் மட்டும் இருக்கும்.

குமாரபாளையம் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், குமாரபாளையம் காளியம்மன் கோவில் பகுதியில் மருத்துவ துறையில் பணியாற்றும் 40 வயது பெண் ஒருவருக்கும், ஏரித்தெரு பகுதியில் அரசு பள்ளியில் பயிலும் 10 வயது மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் குமாரபாளையம் ஜி.ஹெச்.இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வீடு பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுண்ணாம்பு பவுடர் போடுதல், வீட்டில் உள்ளவர்கள் மற்றவர்களுடன் சந்தித்து பேசாமல் கண்காணித்தல், கபசுர குடிநீர் வழங்குதல், உள்ளிட்ட பணிகள் நகராட்சி பணியாளர்கள் சுழற்சி முறையில் செய்து வருகிறார்கள் என்றார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!