நீடிக்கும் தடை: 'சூடு 'பிடித்த கேன்களில் டீ வியாபாரம்

நீடிக்கும் தடை: சூடு பிடித்த கேன்களில் டீ வியாபாரம்
X

டீக்கடைகள், பேக்கரிகள் திறக்கப்பதர்கு தடை தொடர்வதால், கேன்களில் டீ விற்பனை அதிகரித்துள்ளது.

டீ கடைகள்,பேக்கரி திறக்க தடை தொடர்வதால், டீ கேன்களில் டீ, காபி விற்பனை செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரானா பரவல் சற்றே தளர்ந்திருந்தாலும், குறிப்பிட்ட 11 மாவட்டங்களுக்கு தொற்று பரவல் எண்ணிக்கை குறையாததால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இதனால், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதிகளில் டீக்கடைகள்,மற்றும் பேக்கரி கடைகள் திறப்பதற்கு தடை நீடிக்கிறது.

இதனால், டீக்கடைகள் இல்லாமல் டீ விரும்பிகள் தவித்து வரும் சூழலில், சிலர் கேன்களில் டீ விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். பல இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து, டீ விற்பனை செய்து வருகின்ற்னார்.

இதுகுறித்து, கேன் டீ விற்பனையாளர்கள் சிலர் 'இன்ஸ்டாநியூஸ்' தரப்பில் கூறுகையில், டீக்கடைகள் மற்றும் பேக்கரிகள் முழுமையாக மூடப்பட்டு விட்டதால், டீ குடிக்க விரும்பும் மக்கள் கடைகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால் டீ கேன்களில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் விற்பனை செய்கிறோம்.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஊரடங்கு கட்டுப்பாடு, சமூக இடைவெளி கடைபிடித்து விற்பனை செய்து வந்தாலும், ஒரு சில நேரங்களில் விதிமுறைகளை மீறி டீ விற்பனை செய்வதாக, சில நேரங்களில் காவல் துறையினர், கேன்களை பறிமுதல் செய்வது வருத்தமாக உள்ளது என்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!