குமாரபாளையத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

குமாரபாளையத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X
குமாரபாளையத்தில் இன்று புதியதாக, 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது பற்றி, குமாரபாளையம் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது: நேற்றுமுன்தினம் குமாரபாளையம் காளியம்மன் கோவில் பகுதியில் மருத்துவத்துறையில் பணியாற்றும் 40 வயது பெண் ஒருவருக்கும், ஏரித்தெரு பகுதியில் அரசு பள்ளியில் பயிலும் 10 வயது மாணவி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் வீடு, பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று, சுந்தரம் நகர் பகுதியில் இரு பெண்கள், ஒரு ஆண், ஜே.கே.கே. ரோடு பகுதியில் ஒரு பெண் உள்பட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பிளிசிங் பவுடர் போடுதல், வீட்டில் உள்ளவர்கள் மற்றவர்களுடன் சந்தித்து பேசாமல் கண்காணித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பணிகள், நகராட்சி பணியாளர்கள் சுழற்சி முறையில் செய்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி