குமாரபாளையம் தாசில்தார் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

குமாரபாளையம் தாசில்தார் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
X

குமாரபாளையத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த தாசில்தார் தமிழரசி.

குமாரபாளையத்தில் தாசில்தார் தமிழரசி தலைமையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய மாவட்ட கலெக்டர் உத்திரவிட்டுள்ளார். அதன்படி குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி தலைமையில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதுகுறித்து தாசில்தார் தமிழரசி கூறுகையில், கொரோனா வராமல் தடுக்க முக கவசம் அணிய வேண்டும். கிருமிநாசினியைக் கொண்டு அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். பஸ்களில் இடைவெளி விட்டு அமர வேண்டும். அனைத்து கடைகள் முன்பும் சோப்பு, கிருமிநாசினி மருந்து வைத்திருக்க வேண்டும். கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என அவர் பேசினார்.

பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில், வி.ஏ.ஒ.க்கள் முருகன், செந்தில்குமார், எஸ்.ஒ. ராமமூர்த்தி, எஸ்.ஐ. செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!