நகல் கலைஞர் மறைவால், அவரது குடும்பத்தாருக்கு சக கலைஞர்கள் நிதியுதவி

நகல் கலைஞர் மறைவால், அவரது குடும்பத்தாருக்கு  சக கலைஞர்கள் நிதியுதவி
X
குமாரபாளையத்தில் நகல் கலைஞர் மறைவால், அவரது குடும்பத்தாருக்கு சக கலைஞர்கள் நிதியுதவி வழங்கினர்.

நகல் கலைஞர் மறைவால், அவரது குடும்பத்தாருக்கு சக கலைஞர்கள் நிதியுதவி

குமாரபாளையத்தில் நகல் கலைஞர் மறைவால், அவரது குடும்பத்தாருக்கு சக கலைஞர்கள் நிதியுதவி வழங்கினர்.

குமாரபாளையம் மராக்காள்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா, 50. நடன கலைஞர். இவர் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை பகுதியில் சில நாட்கள் முன்பு தன் மனைவி, குழந்தையுடன் சொந்த வேலையாக சென்று விட்டு டூவீலரில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த டூவீலர், இவர் வந்த டூவீலர் மீது மோதியதில் ராஜா பலத்த காயமடைந்தார். பவானி மற்றும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை செய்தும் பலனின்றி இறந்தார். இவரது குடும்பத்தாருக்கு தமிழ்நாடு திரைப்பட நகல் நட்சத்திர கலைஞர்கள் சங்கம் சார்பில் 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. சங்க தலைவர் ரஜினி பாபு, செயலர் எம்.ஜி.ஆர்.குமரேசன், பொருளர் கமல் கதிர், துணை தலைவர் விஜயகாந்த் கணேஷ், செயற்குழு தலைவர் விஜயகாந்த் பழனிசாமி, இணை தலைவர் தளபதி சையத், தே.மு.தி.க. மாவட்ட பொருளர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி, ஒன்றிய நிர்வாகி மணியண்ணன் உள்பட பலரும் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் நகல் கலைஞர் மறைவால், அவரது குடும்பத்தாருக்கு சக கலைஞர்கள் நிதியுதவி வழங்கினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்