/* */

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரிக்கை

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை, பணி நிரந்தரம் செய்ய, மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரிக்கை
X

ஊராட்சிக்கோட்டையில் உள்ள பவானி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக,  கொடியேற்று விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில், ஊராட்சிக்கோட்டையில் உள்ள பவானி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக, 64-ம் ஆண்டு கொடியேற்று விழா, கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.

திட்டத் தலைவர் எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். திட்டச் செயலாளர் வி.சண்முகம் முன்னிலை வகித்தார். மாநிலப் பொருளாளர் எஸ்.மூர்த்தி, கல்வெட்டை திறந்து வைத்து, கொடியேற்றினார். மாநில துணைத் தலைவர் எஸ்.ராமசுப்பிரமணியம், மாநில இணைச் செயலாளர்கள் வி.ராஜேந்திரன், கே.சம்பத், எம்.தனசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


இக்கூட்டத்தில், சம்மேளனத்தின் 64 ஆண்டு சிறப்புகள், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவும் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து பேசப்பட்டது. ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளப்படுத்த வாரியம் நேரடியாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும். போனஸ் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏஐடியூசி கைத்தறி மாநில சம்மேளன செயலாளர் சித்தையன், நிர்வாகி வி.பி.வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Oct 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...