மண் திட்டில் ஏறி நின்ற கண்டைனர் லாரி, அதிகாரிகள் அலட்சியம், தொடரும் விபத்துக்கள்

மண் திட்டில் ஏறி நின்ற கண்டைனர் லாரி, அதிகாரிகள் அலட்சியம், தொடரும் விபத்துக்கள்
குமாரபாளையத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தொடர் விபத்துக்கள் நடப்பதுடன், நேற்றும் கண்டைனர் லாரி மண் திட்டில் ஏறி நின்றது.
குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால் கொங்கு மண்டபம் அருகே அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்படுகிறது. இந்த இடத்தில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும். சில நாட்கள் இந்த விளக்குகள் செயல்படுகிறது. பெரும்பாலான நாட்களில் செயல்படுவது இல்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள், எந்த சிக்னலும் இல்லாததால், அடிக்கடி இந்த இடத்தில் விபத்துக்குள்ளாகி, பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். அதிகாரிகளின் மெத்தனம், ஒப்பந்ததாரரின் பணி தாமதம், ஆகியவற்றால் பல அப்பாவி பொதுமக்கள், ஓட்டுனர்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். பல வாகனங்கள் சேதமாகி பல்லாயிரம் ரூபாய் செலவு ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏற்பட்டு வரும் இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமான, அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையாக நடவடிக்கை எடுக்கக் வேண்டும். பல நாட்களாக எரியாத ஒளிரும் விளக்கு, சிவப்பு விளக்கு இப்போது திடீரென்று எரிகிறது. தங்கள் மீது தவறு இல்லை என நிரூபிக்க, அதிகாரிகள் விளக்குகளை எரிய விட்டுள்ளனர். பாலம் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கும். நேற்றுமுன்தினம் இரவு வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, எவ்வித சிக்னலும் இங்கு இல்லாததால், பணிகள் நடக்கும் இடத்தில் உள்ள மண் திட்டில் ஏறி நின்றது. இதில் ஓட்டுனர், மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இம்ரான், 27, எவ்வித காயமும் இல்லாமல் உயிர் தப்பினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
படவிளக்கம் :
நேற்றுமுன்தினம் இரவு வேகமாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, சேலம் கோவை புறவழிச்சாலையில், குமாரபாளையம் கொங்கு மண்டபம் எதிரில், எவ்வித சிக்னலும் இங்கு இல்லாததால், பணிகள் நடக்கும் இடத்தில் உள்ள மண் திட்டில் ஏறி நின்று விபத்துக்குள்ளானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu