குமாரபாளையத்தில் தேமுதிக சார்பில் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் தேமுதிக சார்பில் ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட துணை செயலர் மகாலிங்கம் பேசினார். நகர செயலர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் அருகில் உள்ளனர்.

குமாரபாளையத்தில் தே.மு.தி.க. சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் நகர செயலர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இதில் வருகிற ஊரக, உள்ளாட்சி தேர்தலில் 33 வார்டுகளிலும் வேட்பாளர்கள் போட்டியிட வைப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல்,

டிச. 13 விஜயபிரபாகரன் பிறந்த நாள் விழா கொண்டாடுதல், நகர நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியாக இருந்து மக்கள் பணியாற்றியது நமது கட்சி. மக்கள் சேவையே எங்கள் குறிக்கோள். தொழில் இல்லாமல் துன்பத்தில் இருந்த வந்த போதும், கொரோனா ஊரடங்கு காலத்தில் நம்மால் ஆன உதவியை செய்து வந்தோம். தன் சொந்த செலவில் நற்பணிகள் செய்து வந்தவர் நம் தலைவர். அவர் வழிநின்று மக்கள் பணி செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவைத்தலைவர் மணி, நகர துணை செயலர் தனபால், பொருளர் செல்வகுமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், சாந்தி, வெள்ளிங்கிரி, கரிகாலன், ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story