குமாரபாளையத்தில் நகர்மன்ற வேட்பாளர்களுடன் ஆலோசனைகூட்டம்

குமாரபாளையத்தில் நகர்மன்ற வேட்பாளர்களுடன் கமிஷனர் சசிகலா பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் நகர்மன்ற வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குமாரபாளையம் நகர்மன்ற தேர்தல் பிப். 19ல் நடைபெற்ற நிலையில் இன்று ஒட்டு எண்ணிக்கை திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. ஓட்டு எண்ணும் மையத்தில், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சசிகலா தலைமையில் நடைபெற்றது.
இதில் சசிகலா பேசியதாவது:
ஒட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு 08:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். வரிசைப்படி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் வேட்பாளர்கள் அவரவர் சுற்று வரும் போது மட்டும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். பிற வேட்பாளர்கள் முன்னதாக அங்கு வருவது வேண்டாம். தேர்தல் விதிமுறைகள் பின்பற்றி ஒட்டு எண்ணிக்கை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் 188 வேட்பாளர்கள், முகவர்கள், நகரமைப்பு ஆய்வாளர் இயற்கைபிரியன், உதவி பொறியாளர் செந்தில்குமார், மேலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu