கலெக்டர் தலைமையில் சுரங்க விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்

கலெக்டர் தலைமையில் சுரங்க விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்
X

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் சங்கர் சிமென்ட் சமுதாய கூடத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே சுரங்க விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் சங்கர் சிமென்ட் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான திட்டம் 1, கருமாபுரத்தானூர் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம், திட்டம் 2, வீராச்சிபாளையம் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம், குறித்து நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை புவியியலாளர் பிரகாஷ், சங்ககிரி ஆர்.டி.ஒ. சவுமியா, தாசில்தார் பானுமதி, நிறுவனத்தின் பங்குதாரர் வீரபாகு, துணை தலைவர் பழனி குமரேசன், பாதுகாவல் அலுவலர் ஆத்மராமன் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!