கட்டுமான பணியில் பலத்த காயமடைந்த தொழிலாளி: 3 பேர் மீது போலீசில் புகார்

கட்டுமான பணியில் பலத்த காயமடைந்த தொழிலாளி: 3 பேர் மீது போலீசில் புகார்
X

பைல் படம்.

குமாரபாளையத்தில் கட்டுமானப்பணியில் பலத்த காயமடைந்த தொழிலாளி வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

குமாரபாளையத்தில் கட்டுமானப்பணியின்போது பலத்த காயமடைந்தவர், வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

குமாரபாளையம் அருகே கத்தேரி சாமியம் பாளையம் பகுதியில் வசிப்பவர் கருணாகரன்,53. கட்டுமான பணியில் செண்டரிங் வேலை செய்பவர். ஏப். 28ம் நாள் முத்து, 52, என்ற மேஸ்திரி அழைத்ததின் பேரில், ஆனங்கூர் ரோடு, ஒட்டன்கோவில் பகுதி எம்.எஸ்.வி. மகாலுக்கு பின்புறம் செங்கோடன், 52, என்பவர் வீட்டிற்கு கீழ்நிலை தண்ணீர் தொட்டி செண்டரிங் வேலை செய்ய சென்றார். அஜித், 22, என்பவனும் கூட வேலை செய்தான்.

இவர்கள் வேலை செய்த இடத்திற்கு அருகில் ராஜேஷ்குமார், 31, என்பவர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தரை தளத்தை மண் கொட்டி சமன் செய்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக மண்ணை தண்ணீர் தொட்டி அருகே கொட்டியதில் கருணாகரன் பலத்த காயமடைந்தார். அஜித் லேசான காயம் அடைந்தார்.

வீட்டின் உரிமையாளர் செங்கோடன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு, இனி தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என கூறி வந்ததாக கூறப்படுகிறது. கருணாகரனை அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், வேலைக்கு அழைத்து சென்ற முத்து, வீட்டின் உரிமையாளர் செங்கோடன், ஜே.சி.பி. ஓட்டுனர் ராஜேஷ்குமார் மூவரும் தனக்கு எவ்வித உதவியும், பாதுகாப்பும் செய்யவில்லை என்று குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்