கழிப்பிடம் கட்ட பூமி பூஜை

கழிப்பிடம் கட்ட  பூமி பூஜை
X

குமாரபாளையம் எம்பெருமாள் லைன் பகுதியில் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.

குமாரபாளையத்தில் எம்பெருமாள் லைன் பகுதியில் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை நடந்தது

குமாரபாளையம் நகராட்சி எம்பெருமாள் லைன் பகுதியில் 24.96 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் மற்றும் சிறுநீர் கழிப்பறை கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்து, பணிகளை துவக்கி வைத்தார். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் கோவிந்தராஜன்,

அழகேசன், ஜேம்ஸ், வேல்முருகன், தர்மராஜன், கதிரவன் சேகர், கனக லட்சுமி கதிரேசன், புஷ்பா ஆறுமுகம், மகேஸ்வரி சரவணன், சுமதி சந்திரன், பரிமளம் கந்தசாமி, கிருஷ்ணவேணி, மற்றும் கழக பேச்சாளர் அன்பழகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது.

மாநிலம் முழுதும் மக்களின் முதல்வர் திட்ட முகாம் துவங்கி நடந்து வருகிறது. குமாரபாளையம் சுந்தரம் திருமண மண்டபத்தில் நடந்த மூன்றாம் நாள் முகாமில், நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, முகாமினை துவக்கி வைத்தார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, எரிசக்தி துறை மற்றும் மின்சார வாரியம், வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, வீட்டுவசதி துறை, சுகாதாரத்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். தாசில்தார் சண்முகவேல், ஒ.ஏ.பி. தாசில்தார் தங்கம், ஆர்.ஐ., வி.ஏ.ஒ.க்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்