குமாரபாளையத்தில் மறைந்த மக்கள் நீதி மய்ய நிர்வாகி குடும்பத்திற்கு ஆறுதல்
குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்ய நிர்வாகி சரவணன் மறைவுக்கு கட்சியின் கலைக்குழு மாவட்ட நிர்வாகி கதிர்கமல் நேரில் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் நகர செயலர் சரவணன் மாரடைப்பு காரணமாக நேற்றுமுன்தினம் இறந்தார். அவரது விருப்பப்படி அவரின் குடும்பத்தினர் கண் தானம் வழங்க முன்வந்ததால், ஈரோடு அரசன் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் நேரில் வந்து கண் தானம் பெற்றனர்.
மக்கள் நீதி மய்யம் நாமக்கல் மாவட்ட கலைக்குழு நிர்வாகியும், அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு, நீயா? நானா? நிகழ்ச்சி சாதனையாளரும், கமல் நடிக்கும் விக்ரம் 2 பட நடிகருமான கதிர் கமல் நேரில் பங்கேற்று, மறைந்த சரவணன் மறைவிற்கு மலரஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது மகளிரணி நகரச் செயலர் சித்ரா, நிர்வாகிகள் ரேவதி, உஷா, ஜேம்ஸ், சிவகுமார், கார்த்தி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu