பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையம்,  பள்ளிபாளையம் பிரிவு சாலையில்,  குமாரபாளையம் நகர காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி, குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில், குமாரபாளையம் நகர காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும், தொடர்ச்சியான விலை உயர்வினால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொற்று அதிகம் உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!