குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் காங்கிரஸ் சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜி.எஸ்.டி. குளறுபடிகள், பணவீக்கம், கொள்ளை போகும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட செயல்பாடுகள் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், நகர துணை தலைவர் சிவகுமார், சிவராஜ் ,மாவட்ட துணை தலைவர் சக்திவேல், தங்கராஜ், பார்த்தசாரதி, கோகுல்நாத்,மனோகரன், ஆதிகேசவன், ஆறுமுகம், மாரிமுத்து, மகளிர் அணியினர், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்