/* */

குமாரபாளையம் அருகே காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நிறைவு விழா

குமாரபாளையம் அருகே காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நிறைவு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நிறைவு விழா
X

குமாரபாளையம் அருகே காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நிறைவு விழாவில் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா. பங்கேற்று பேசினார்.

75வது சுதந்திரதினவிழாவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் பாதயாத்திரை நிறைவு விழா மாவட்ட துணை தலைவர் அல்லிமுத்து தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வே.ரா. பங்கேற்று பேசினார். இவர் பேசியதாவது:

பா.ஜ.க. ஆட்சியில் கடுமையான விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரி பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருவது நாட்டிற்கு நல்லதல்ல. 5ஜி அலைக்கற்றை ஊழல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட தலைவர் செல்வகுமார், வடக்கு வட்டார தலைவர் ரவிச்சந்திரன், தெற்கு வட்டார தலைவர் சுரேஷ்கண்ணா, பள்ளிபாளையம் நகர தலைவர் ராஜேந்திரன் மற்றும் நகர, வட்டார, மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிரணியினர் பெருமளவில் பங்கேற்றனர்.

Updated On: 15 Aug 2022 4:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  2. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  3. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  6. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  7. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  9. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  10. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்