காங்கிரஸ் கட்சி 137ம் ஆண்டு துவக்க விழா: குமாரபாளயைத்தில் கட்சியினர் கொண்டாட்டம்

காங்கிரஸ் கட்சி 137ம் ஆண்டு துவக்க விழா: குமாரபாளயைத்தில் கட்சியினர் கொண்டாட்டம்
X

குமாரபாளையத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.

காங்கிரஸ் கட்சியின் 137ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி குமாரபாளயைத்தில் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில், கட்சியின் 137ம் ஆண்டு துவக்க விழா நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

கட்சியின் கொடியை மூத்த நிர்வாகி வஜ்ரவேல் ஏற்றி வைத்தார். கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காமராஜ் திருவுருவச்சிலைக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் மாலை அணிவித்தார்.

கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கட்சி அலுவலகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகளின் திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன.

நிர்வாகிகள் தங்கராசு, சிவராஜ், மோகன் வெங்கட்ராமன், சுப்பிரமணியம், நடராஜ், சந்திரசேகர், ஜனார்த்தனன், சந்திரன், பழனிச்சாமி, ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare