காங்கிரஸ் கட்சியின் "டிஜிட்டல் உறுப்பினர்" சேர்க்கை தீவிரம்

காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
X

குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிர டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி, தற்போது ஒற்றை இலக்கங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலிலும் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி, தீவிர டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சியினர் செய்து வருகின்றனர். இதன் ஓர் பகுதியாக குமாரபாளையத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

காவேரி நகர், பண்டரிகோவில் வீதி,அம்மன் நகர், காந்திபுரம் கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த முகாம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலர் கோகுல்நாத், மாவட்ட பொதுச் செயலாளர் மனோகரன், மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து, நிர்வாகிகள் சண்முகம், பழனிச்சாமி, பெரியசாமி மற்றும் மகளிரணியினர் பங்கேற்றனர்.

Tags

Next Story