குமாரபாளையத்தில் சுதந்திரதின விழாவையொட்டி காங்கிரசார் பாத யாத்திரை

குமாரபாளையத்தில் சுதந்திரதின விழாவையொட்டி காங்கிரசார் பாத யாத்திரை
X

குமாரபாளையம் காங்கிரசார் சார்பில் பாத யாத்திரை நடத்தப்பட்டது.

சுதந்திரதின விழாவையொட்டி குமாரபாளையம் காங்கிரசார் சார்பில் பாத யாத்திரை நடத்தப்பட்டது.

75வது சுதந்திரதின விழாவையொட்டி தேச விடுதலைக்கு பாடுபட்டு உயிர்நீத்த தலைவர்களின் நினைவை போற்றும் வகையில் குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் சத்தியாக்கிரக பாத யாத்திரை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் யாத்திரை புறப்பட்டது. நகர காங்கிரஸ் தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ஆதிகேசவன், மகளிர் அணி நிர்வாகி மல்லிகா, நிர்வாகிகள் சாமிநாதன், தங்கராஜ், சிவகுமார், கோகுல்நாத், மனோகரன், ரவிச்சந்திரன், நக்கீரன், பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்த யாத்திரை கட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!