குமாரபாளையத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கூட்டணி கட்சியினருடன் பிரசாரம்

குமாரபாளையத்தில் காங்கிரஸ்  வேட்பாளர் கூட்டணி கட்சியினருடன் பிரசாரம்
X
குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சத்யப்ரியா, தனது கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரம் செய்தார்.

குமாரபாளையம் 17வது வார்டில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சத்யபிரியா போட்டியிடுகிறார். நேற்று தி.மு.க. நகர பொறுப்பாளர் செல்வம், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜகன்நாதன், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் ஜானகிராமன், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் மோகன் வெங்கட்ராமன், பொருளாளர் சிவராஜ், சி.பி.ஐ. நிர்வாகிகள் பாலு, கேசவன், சி.பி.எம். நிர்வாகிகள் பாலுசாமி, சக்திவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஜே.கே.கே. சாலை, பழைய தலைமை அஞ்சல் நிலைய வீதி, கத்தாளபேட்டை, திருவள்ளுவர் வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்தனர்.

வேட்பாளர் சத்யபிரியா பேசியதாவது: என்னை வெற்றி பெற வைத்தால் 17வது வது வார்டு பகுதியில் பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான வடிகால் வசதி, சாலை வசதி, குப்பைகள் தினமும் அகற்றி சுகாதாரம் மிகுந்த வார்டாக வைத்திருப்பேன். குடிநீர் பிரச்சனை இல்லாதிருத்தல், ரேசன் கடைகளில் அனைவருக்கும் அனைத்து பொருட்களும் கிடைக்க செய்தல் உள்ளிட்ட பல அத்தியாவசிய பணிகளை செய்து தர பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story