தேசிய திறனறித்தேர்வில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு நகராட்சி நிர்வாகிகள் பாராட்டு

தேசிய திறனறித்தேர்வில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு  நகராட்சி நிர்வாகிகள் பாராட்டு
X

குமாரபாளையம் நகராட்சித்தலைவர் விஜய்கண்ணன்

தேசிய திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக்கு குமாரபாளையம் நகராட்சி சேர்மன் கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்தனர்

ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக நடத்தப்படும் தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக்கு குமாரபாளையம் நகராட்சி சேர்மன், கவுன்சிலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

குமாரபாளையம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனறி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 2ம் நிலை தேர்வுகள் வைக்கப்பட்டு, அதிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உயர்கல்வி பெற கல்வி உதவி தொகை வழங்கப்படும். இந்த தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெறுபவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

இந்த தேர்வில் குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி, லத்விகா, புத்தர் தெரு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் பாலகுமாரன் ஆகிய இருவரும் தலா 3 ஆயிரம் பரிசு தொகை பெற தேர்வாகினர். இருவரையும் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், கவுன்சிலர்கள் வள்ளியம்மாள், அழகேசன், செந்தில், கோவிந்தராஜ், வேல்முருகன் பி.டி.ஏ நிர்வாகி வாசுதேவன், தலைமை ஆசிரியர் மோகன், தலைமை ஆசிரியை சிவகாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டினர்.



Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா