குமாரபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ., ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து   சி.ஐ.டி.யூ.,  ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, விசைத்தறி தொழிலாளர்களையும், விசைத்தறி தொழிலையும், பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ ) சார்பில் ஆனங்கூர் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் வேலுசாமி ஆர்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்த ஆர்பாட்டத்தில் நூல் கட்டுகள், நூல் கோன்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. விசைத்தறிகளுக்கு மானிய விலையில் நூல் அரசே வழங்க வேண்டும். உள்நாட்டு தொழில்கள் நிறுத்த பஞ்சு ஏற்றுமதியை நிறுத்த வேண்டும்.

சாயநீர் சுத்திகரிப்பு நிலையம் உடனே அமைக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்ட செயலர் அசோகன், நகர செயலர் பாலுசாமி, நகர துணை தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் மோகன், மேகநாதன், சந்திரசேகர், ஏசுராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்