குமாரபாளையத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து பிரச்சார இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து  பிரச்சார இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

குமாரபாளையத்தில் பா.ஜ.க. அரசை கண்டித்து பிரச்சார இயக்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

குமாரபாளையத்தில் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து பிரச்சார இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் பகத்சிங் பிறந்த நாளான 28ம் தேதி வரையில் மாநிலம் தழுவிய மகள் கோரிக்கை பிரச்சார இயக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சி, இடது தொழிற்சங்க மையம் நடத்துகிறது. கோவையில் தொடங்கி சென்னையில் முடிவடையும் இந்த பிரச்சார இயக்கத்தில் மக்களுக்கு விரோதமான, விவசாயிகள் நலனுக்கு எதிரான பா.ஜ.க. மோடி அரசு பதவி விலக வேண்டும்.

தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என பிரச்சார பயணத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனங்கூர் பிரிவில் நடைபெற்ற இப்பிரச்சாரத்திற்கு கட்சியின் ஆலோசனை குழு தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார்.

அம்பத்தூர் செயலர் மோகன், எல்.டி.யூ.சி. மாநில பொதுச் செயலர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் குருசாமி, செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!