நகர்மன்ற அவசர கூட்டத்தில் கமிஷனருக்கு கண்டனம்: சுயேட்சை, அதிமுகவினர் வெளிநடப்பு

நகர்மன்ற அவசர கூட்டத்தில் கமிஷனருக்கு கண்டனம்: சுயேட்சை, அதிமுகவினர் வெளிநடப்பு
X

குமாரபாளையம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து நகராட்சி அலுவலகம் முன் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

குமாரபாளையம் அவசர நகர்மன்ற கூட்டத்தில் கமிஷனருக்கு கண்டனம் தெரிவித்து சுயேச்சை கவுன்சிலர், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

அவசர நகர்மன்ற கூட்டத்தில் கமிஷனருக்கு கண்டனம் தெரிவித்த சுயேச்சை கவுன்சிலர் - அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு.

குமாரபாளையம் அவசர நகர்மன்ற கூட்டத்தில் கமிஷனருக்கு சுயேச்சை கவுன்சிலர் கண்டனம் தெரிவித்து பேசியதுடன், அ.தி.மு.க.வினர் சொத்டுவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். குமாரபாளையம் நகரமன்ற அவசர கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

சுயேச்சை கவுன்சிலர் அழகேசன் பேசியதாவது:- எங்கள் வார்டில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. அதனை அகற்ற எஸ்.ஓ.விடம் புகார் செய்தேன். அவர் பொக்லினுடன் வந்து, அடைப்பு இருந்த இடத்திலிருந்து 300அடி தள்ளி ஆக்கிரமிப்பு அகற்றினர். ஆனால் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் இடிக்கவில்லை. இவருக்கு யார் உத்திரவு கொடுத்தது. நகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவிக்க சென்றால், நிருபரை போட்டோ எடுக்க அனுமதிப்பதில்லை, முரண்பாடாக ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கிறார். யாருடைய உத்திரவின்படி இவ்வாறு முரண்பாடாக செயல்படுகிறார். எனக்கு இது குறித்து எழுத்து மூலமாக பதில் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. நகர செயலரும், 30வது வார்டு கவுன்சிலருமான பாலசுப்ரமணி தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமராமல், எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் தனக்கு, முன் வரிசையில் இடம் ஒதுக்க வேண்டும், என கூறி, துணை சேர்மன் இருக்கையில் அமர்ந்தார்.

அழகேசன்:(சுயேச்சை) : அப்படி ஒரு வழிகாட்டுதல் இருக்கிறதா? என விசாரித்து பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலருக்கு இருக்கை ஒதுக்கலாம்.

சேர்மன் விஜய்கண்ணன்: அழகேசன் வார்டில் முரண்பாடாக ஆக்கிரமிப்பு அகற்ற சொன்னது யார் ?என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. கவுன்சிலர் இப்போது அவருக்கென ஒதுக்கிய இருக்கையில் அமரலாம்.

பாலசுப்ரமணி(அ.தி.மு.க.): நான் இங்குதான் உட்காருவேன்.

சேர்மன் விஜய்கண்ணன் : எனக்கு உங்களிடமிருந்து இருக்கை ஒதுக்க எந்த விண்ணப்பமும் வரவில்லை.

பாலசுப்ரமணி(அ.தி.மு.க.): கமிஷனர் வசம் கொடுத்துள்ளேன்.

சேர்மன் விஜய்கண்ணன் : பிறகு தலைவர் என்பது எதற்கு? நீங்கள் கமிஷனர் வசம் பேசி கொள்ளுங்கள்.

பாலசுப்ரமணி(அ.தி.மு.க.) : தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சொத்துவரி உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

( கருப்பு ஆடை அணிந்து வந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்). சொத்துவரி, காலி மனை வரி உயர்வு சம்பந்தமான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. கட்சியினர் நகராட்சி முன்பு சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு கோஷங்கள் போட்டவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!