குவிந்த வாடிக்கையாளர்கள்...

குவிந்த வாடிக்கையாளர்கள்...
X
முடி திருத்தம்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது

இந்த ஊரங்டங்கின் பொழுது அத்தியாவசிய கடைகள் மருந்தகம், பால் உள்ளிட்ட கடைகளைத் தவிர மற்ற கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கபட்டுள்ளது

சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு தடை விதித்தது இந்நிலையில் இன்றும் நேற்றும் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வசந்த நகர் பகுதியில் உள்ள முடி திருத்தும் கடையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் காத்திருந்து முடிதிருத்தம் செய்து கொண்டனர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய வாடிக்கையாளர்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது மேலும் தொடரும் சூழல் ஏற்பட்டால் கடைகளை திறப்பது தாமதமாகலாம் எனவே இப்பொழுதே முடி திருத்தம் செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர்.

Tags

Next Story