குமாரபாளையத்தில் விதிமீறி டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக போலீசில் புகார்

குமாரபாளையத்தில் விதிமீறி டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக போலீசில் புகார்
X

போலீசில் புகார் மனு அளித்த அதிமுக வினர்.

குமாரபாளையம் டாஸ்மாக் கடைகளில் விதி மீறி மது விற்பனை நடப்பதாக அ.தி.மு.க. சார்பில் குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் டாஸ்மாக் கடைகளில் விதி மீறி 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்ககோரியும் அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில், அ.தி.மு.க.வினர் குமாரபாளையம் போலீசில் புகார் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

குமாரபாளையத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த நேரத்தை விட 24 மணி நேரமும், அரசு மதுபான கூடம் திறந்து வைத்து, அதிக விலைக்கு மது விற்பனை செய்து வருகிறார்கள். காலையில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து செல்லும் மகளிரிடம் குடிமகன்கள் தகராறு செய்கிறார்கள். இதனால் பெண்கள் நடமாட அச்சம் கொண்டுள்ளனர். பார் எடுத்த நபர்களிடம் சொல்லியும் பலனில்லை. பொதுமக்கள், மகளிர் ஆகியோர் அச்சமின்றி நடமாடவும், போதிய பாதுகாப்பு வழங்கவும், விதி மீறி செயல்படும் கடைகள் மற்றும் பார்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம். இல்லாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்படுள்ளது.

அ.தி.மு.க. நகர துணை செயலர் திருநாவுக்கரசு, கவுன்சிலர் பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் அர்ச்சுனன், ரவி, சிங்காரவேல், பாஸ்கர், சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai solutions for small business