குமாரபாளையம் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுவதாக புகார்

குமாரபாளையம் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுவதாக புகார்
X

குமாரபாளையம் கிழக்கு கரை வாய்க்காலில் குழாய் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது.

குமாரபாளையம் அருகே கிழக்கு கரை வாய்க்காலில் வீரப்பம்பாளையம் கூளையன்காடு பகுதியில் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது.

குமாரபாளையம் அருகே கிழக்கு கரை வாய்க்காலில் வீரப்பம்பாளையம் கூளையன்காடு பகுதியில் தண்ணீர் திருட்டு நடைபெறுகிறது.

குமாரபாளையம் அருகே கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதால் கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் இருந்து பலரால் டியூப் மூலம் தண்ணீர் திருடப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயம், கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

வீரப்பம்பாளையம் கூளையன்காடு பகுதியில் மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் தண்ணீர் பலரால் டியூப் மூலம் திருடப்பட்டு அவர்கள் நிலத்திற்கு பயன்படுத்துவது போக, விற்பனையும் செய்து வருகிறார்கள். மேலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருந்த அருந்ததியர் காலனி மயான வழியில், சமரசம் ஏற்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த தண்ணீர் செல்வதால் கான்கிரீட் யாவும் அடித்து செல்லப்படுகிறது. பல வகைகளில் இடையூறு ஏற்படுத்தும் இந்த திருட்டுக்கு பொதுப்பணித்துறை பணியாளர்கள் உதவி செய்து வருவதுதான் உச்ச கட்ட தகவல். இப்படிப்பட்ட பணியாளர்கள் மீதும், தண்ணீர் திருடும் நபர்கள் மீதும், தக்க நடவடிக்கை எடுத்து கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்ல அதிகாரிகள் உதவிட வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

இந்த புகார் தொடர்பாக பொதுப்பணித்துறை உதவி முதன்மை பொறியாளர் சுவாமிநாதனிடம் கேட்ட போது வாய்க்கால் நீரை டியூப் மூலம் திருடுவது சட்டப்படி குற்றம். இது குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!