குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள்
X

விடியல் ஆரம்பம் புத்தக கண்காட்சி சார்பில் நாராயண நகர் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து புத்தகங்கள் வாங்கி சென்று வருகின்றனர். நாராயண நகர் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் எதற்கு படிக்க வேண்டும் என்ற தலைப்பில் பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தபட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைப்பாளர் பிரகாஷ் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

இது பற்றி பிரகாஷ் கூறியதாவது:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதமாக மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தை விட்டு வருகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கைக்கு ஏற்றதல்ல. எனவே மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திட இது போன்ற போட்டிகள் வைக்கப்பட்டு பரிசாக புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!