குமாரபாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை

குமாரபாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை
X

குமாரபாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், உறுப்பினர் சேர்க்கை துவக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட செயலர் கோவிந்தராஜ் உறுப்பினர் அட்டை வழங்கினார்.

குமாரபாளையத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் துவக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனரும், மாநில ஆலோசனை குழு தலைவருமான குமாரசாமி வழிகாட்டுதல் பேரில், தீவிர உறுப்பினர் சேர்க்கை பணி குமாரபாளையம் பகுதியில் துவங்கியது. இதில் மாவட்ட செயலர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.

குமாரபாளையம், பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, காவேரி நகர் உள்ளிட்ட பல இடங்களில் முகாம் அமைத்து தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் உடனே வழங்கப்பட்டன. மாவட்ட குழுவை சேர்ந்த புகழேந்தி, மாரியப்பன், நகர குழுவை சேர்ந்த சீனிவாசன், தேவி, பானு உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!