கேஸ் விலை உயர்வு: கம்யூனிஸ்ட் சார்பில் குமாரபாளையத்தில் சைக்கிள் பேரணி

கேஸ் விலை உயர்வு: கம்யூனிஸ்ட் சார்பில் குமாரபாளையத்தில் சைக்கிள் பேரணி
X

குமாரபாளையத்தில், சிபிஐ சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. 

பெட்ரோல், சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், குமாரபாளையத்தில் இன்று சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு, நகர செயலர் கேசவன் தலைமை வகித்தார். மாநில கட்டுப்பாட்டு குழு நிர்வாகி மணிவேல், சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தார். பள்ளிபாளையம் பிரிவு சாலையில் துவங்கிய பேரணி, சேலம் சாலை, இடைப்பாடி சாலை, பெராந்தர் காடு, காவேரி நகர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, நடராஜா நகர், சுந்தரம் நகர், கிழக்கு மற்றும் மேற்கு காலனி, அம்மன் நகர், நாராயண நகர், தம்மண்ணன் வீதி, உள்ளிட்ட பல வீதிகளின் வழியாக வந்து பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நிறைவு பெற்றது.

பேரணியில் பங்கேற்றவர்கள், கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்களை முழங்கியவாரே சென்றனர். பள்ளிபாளையம் பிரிவில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தை, முன்னாள் நகர செயலர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் வக்கீல் கார்த்திகேயன், ஏ.ஐ.ஒய். எப். நகர செயலர் கணேஷ்குமார் ஏகானந்தம் உள்பட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!