கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி
X

குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில், சாக்கடை அடைப்பால் பாதையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதில் சைக்கிள் பழுது பார்க்கும் நபர், கழிவுநீர் தேங்கிய பகுதியில் அமர்ந்து சுகாதாரமற்ற முறையில் பணி செய்கிறார். 

குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் வடிகால் அடைப்பால் கழிவுநீர் தேங்குவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் வடிகால் அடைப்பால், கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதிகுள்ளாகி வருகிறார்கள்.

குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் காவிரி நகர் பகுதியில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக சாக்கடை கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வீதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது .மேலும் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. காவேரி நகர் பகுதியில் சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வரும் தொழிலாளி. வேறு வழி இன்றி சாக்கடை நீர் தேங்கி நிற்கும் இடத்திலேயே துர்நாற்றத்திற்கு மத்தியில் அமர்ந்து பணியாற்றி வருகிறார்.

இது குறித்து மாவட்ட தே.மு.தி.க மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் கூறியதாவது:

கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் தேங்குகிறது.. இவ்வழியே தினந்தோறும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர், விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் சென்று வருகிறார்கள். தொடர்ந்து கழிவு நீர் தேங்கி வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு எட்டப்படாத பட்சத்தில் வார்டு பகுதிகளை ஒன்றிணைத்து நகராட்சி அலுவலகம் முன்பு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!