குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி துவக்கம்

குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி துவக்கம்
X

உள்ளாட்சி தேர்தலையொட்டி குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி துவக்கப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி துவக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் நகரமன்ற தேர்தலையொட்டி ஜன. 28 முதல், பிப். 4 வரை 250 மனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு பரிசீலனையில் பல்வேறு குறைபடுகளுக்காக 6 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 244 பேர் களத்தில் இருந்தனர்.

வேட்புமனு வாபஸ் வகையில் 56 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்ட நிலையில் 188 வேட்பாளர்களுடன் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. 33 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது.

இதற்காக வேட்பாளர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வார்டு வேட்பாளர்களையும் அழைத்து, அவர்களின் முன்னிலையில் சின்னங்கள் பொருத்தப்பட்டன. ஒவ்வொரு வார்டுக்கும் 20 நிமிடம் வரை ஆனதால், இதர வார்டு வேட்பாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!