புறவழிச்சாலை புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கம்

புறவழிச்சாலை புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கம்
X

குமாரபாளையம் அருகே புறவழிச்சாலை புதிய தார் சாலையில் கத்தேரி பிரிவு பகுதியில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே புறவழிச்சாலை புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் புதிய தார் சாலை சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதில் டூவீலர் செல்லவும், பிரிவு சாலைகளில் வாகனங்கள் காத்திருந்து செல்லும் வகையிலான வெள்ளை கோடுகள் போடப்படாமல் இருந்தது. பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, நேற்று கத்தேரி பிரிவு பகுதியில் புதிய தார் சாலையில் வெள்ளைக்கோடு போடும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இதனால் டூவீலர்களில் செல்பவர்கள், பிரிவு சாலைகளில் செல்பவர்கள் அச்சமின்றி செல்லும் நிலை உருவாகியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!