குமாரபாளையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள், கணக்கெடுக்கும் பணி துவக்கம்

குமாரபாளையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள், கணக்கெடுக்கும் பணி துவக்கம்
X

குமாரபாளையத்தில் பள்ளிக்கு செல்லா குழந்தைகள் பற்றி கணக்கெடுக்கும் பணி துவங்கியது

குமாரபாளையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள், கணக்கெடுக்கும் பணி துவங்கியது.

குமாரபாளையம் வட்டார வள மையம் சார்பில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி வட்டார கல்வி அலுவலர் வளர்மதி தலைமையில் துவக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி வளர்மதி கூறியதாவது:

6 வயது முதல் 12 வயது வரை மற்றும் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி செல்லா சிறுவர், சிறுமியரை கண்டறியும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.


இது போன்றவர்களின் பெற்றோர்களிடம் வலியுறுத்தி பள்ளியில் சேர்க்க வைக்கப்படுகிறது. காந்திபுரம், பெராந்தர்காடு, சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இந்த பணி மேலும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

மேற்பார்வையாளர் மல்லிகேஸ்வரி, ஆசிரியர் பயிற்றுனர்கள் ஜாகிதாபானு, சக்தி, சங்கீதா, தேவி, மஞ்சுளா, விஜயகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா