சமூக ஆர்வலர் ஸ்டான் சாமிக்கு குமாரபாளையத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி

சமூக ஆர்வலர் ஸ்டான்  சாமிக்கு குமாரபாளையத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி
X

பள்ளிபாளையம் குமாரபாளையம் பிரிவு சாலையில் பாசிச எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் ஸ்டான்சாமி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுவதை படத்தில் காணலாம்.

பாசிச எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் குமாரபாளையம்-பள்ளிபாளையம் பிரிவு சாலையில் சமூக ஆர்வலர் ஸ்டான் சாமி நினைவேந்தல் நடைபெற்றது.

ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களின் உரிமைப்போராளியான, தமிழகத்தை சேர்ந்த ஸ்டேன்சாமி, மும்பை சிறையில் அண்மையில் காலமானார். குமாரபாளையம் பாசிச எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில், அவருக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

பள்ளிபாளையம், குமாரபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வழக்கறிஞர் கார்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் ப.பா.மோகன் சிறப்புரையாற்றினர். நகர திமுக எம்.செல்வம், காங்கிரஸ் நகரதலைவர் ஜானகிராமன், மதிமுக சார்பில் விஸ்வநாதன், தி.க சார்பில் சரவணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் படைவீடுபெருமாள், சி.பி.எம்.எல். சுப்ரமணி, ஜம்புமுதலியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். சரவணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business