குமாரபாளையத்தில் நாடக, திரை கலைஞர் பூ ராமுவிற்கு நினைவேந்தல் கூட்டம்
X
நாடக மற்றும் திரைக் கலைஞர் பூ ராமுவிற்கு நினைவேந்தல் கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.
By - K.S.Balakumaran, Reporter |1 July 2022 9:15 PM IST
நாடக, திரை கலைஞர் பூ ராமுவிற்கு நினைவேந்தல் கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது.
நாடக மற்றும் திரைக் கலைஞர் பூ ராமு சில நாட்கள் முன்பு இறந்தார். இவருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் குமாரபாளையத்தில் நினைவேந்தல் கூட்டம் உதவி தலைவர் குணசேகரன் தலைமையில் ஆனங்கூர் பிரிவு சாலையில் நடந்தது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இலக்கிய தளம் அன்பழகன், நிர்வாகிகள் சுவாமிநாதன், பாண்டியன், காந்தி சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu