15வது பட்டாலியனுக்கு கோவை கமாண்டர் வருகை

15வது பட்டாலியனுக்கு கோவை  கமாண்டர் வருகை
X

குமாரபாளையம் அருகே 15வது பட்டாலியனுக்கு கோவை கமாண்டர் நாயுடு வருகை தந்தார்.

குமாரபாளையம் அருகே 15வது பட்டாலியனுக்கு கோவை கமாண்டர் வருகை தந்தார்.

கோவை என்.சி.சி. பிரிவின் கீழ் இயங்கும் ஈரோடு 15வது பட்டாலியனுக்கு கோவை கமாண்டர் கர்னல் எல்.சி.எஸ். நாயுடு, ஆண்டு ஆய்வுக்காக வந்தார். இவரை என்.சி.சி. மாணவர்கள் சிறப்பான அணிவகுப்புடன் ஈரோடு 15வது பட்டாலியன் கமாண்டிங் அலுவலர் லெப்டினன்ட் கர்னல் அணில் வர்மா, நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றிக் கொண்ட அவர் அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்தார். என்.சி.சி. மாணவர்களுடன் நேரிடையாகவும், ஆன்லைன் மூலமாகவும் உரையாடினார். தமிழ்நாடு மற்றும் கோவை மண்டல அளவில் ஈரோடு 15வது பட்டாலியன் ஐந்தாவது வருடமாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார். இதில் சுபேதார் மேஜர் செந்தில்குமார், ராணுவ பயிற்சியாளர்கள், கல்லூரி, பள்ளிகளின் என்.சி.சி. அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். வருடாந்திர ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.


Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!