குமாரபாளையம்: தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை

குமாரபாளையம்: தாய் திட்டியதால் கல்லூரி   மாணவி தற்கொலை
X
குமாரபாளையத்தில் தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

குமாரபாளையம் அம்பேத்கார் தெருவில் வசிப்பவர் சுதர்ஷினி, 18. தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. கணிதம் படித்து வந்தார். இவரது அப்பா ரமேஷ், 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அம்மா ராதிகா, 41, கூலி வேலை செய்து வளர்த்து வந்தார்.

நேற்று காலை 11:30 மணியளவில் சுதர்ஷினி வெளியில் சிறுமிகளிடம் விளையாடிக்கொண்டு இருந்த போது, அவரது அம்மா ராதிகா, மார்க் குறைவாக எடுத்து விட்டு, விளையடிகொண்டு இருக்கியா? என்று திட்டி விட்டு மார்க்கெட் சென்று விட்டார்.

இதன் பின்னர், உறவினர் சிவகாமி, சுதர்ஷினி தூக்கு மாட்டிக் கொண்டது குறித்து, ராதிகாவிடம் கூறியுள்ளார். ஓடி வந்து பார்த்து, சுதர்ஷினியை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்து விட்டார் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இறந்த சுதர்சினிக்கு, ஐஸ்வர்யா என்ற தங்கை, ரூபன்சந்திரன் ஆகிய தம்பி உள்ளனர்.

Tags

Next Story
ai automation in agriculture