மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி
X

பைல் படம்.

Dead News Today - குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dead News Today - குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, உப்புக்குளம் பகுதியில் வசிப்பவர் பிரகாஷ், 22. தனியார் கல்லூரியில் பி.ஈ., இறுதியாண்டு படித்து வருகிறார். தனது உறவினர் வீடு கிரஹபிரவேசம் இன்று (ஜூன் 9) நடக்கவிருந்த நிலையில், நேற்று காலை 11:00 மணியளவில் ஒயரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மெயின் பாக்ஸ் பணி செய்யும் போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, பரிசோத்தித்த டாக்டர் உயிர் பிரிந்ததாக கூறினார். இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.எஸ்.ஐ. தன்ராஜ் வழக்குபப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story