அப்புராயர் சத்திரம் இட குடியிருப்பு குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு
படவிளக்கம் :
குமாரபாளையம் அப்புராயர் சத்திரம் குறித்து மாவட்ட கலெக்டர் உமா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்புராயர் சத்திரம் இட குடியிருப்பு குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு
குமாரபாளையம் அப்புராயர் சத்திரம் இட குடியிருப்பு குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
குமாரபாளையம் தாலுகாவிற்குட்பட்ட குமாரபாளையம் நகர காவேரிக்கரை அப்புராயர் சத்திரத்தில் நான்கு தலைமுறைகளாக வீடு கட்டி வசித்து வரும் 19வது வார்டுக்குட்பட்ட 184 குடும்பத்தினரை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மேற்கோள் காட்டி, இந்து சமய அறநிலைத்துறை சார்பில்,வீடுகளை காலி செய்யச் சொல்லி பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது சம்பந்தமாக பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் நிவாரணம் வேண்டி, 184 குடும்பத்தினரின் சார்பாக குமாரபாளையம் தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், தமிழ் மாநில கூட்டுறவு பயனீட்டாளர்கள் நலச்சங்க மாநில செயலர் பிரபாகரன் தலைமையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வசம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா நேரில் வந்து, ஆய்வு செய்து, குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட அதிகாரிகள் வசம் விபரங்கள் கேட்டறிந்தார். பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்கம் சார்பில், குமாரபாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு நிர்ணயம் செய்த அதிக டெபாசிட், அதிக வாடகை ஆகியவற்றை குறைத்து நிர்ணயம் செய்யச் சொல்லி, நாமக்கல் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu