4 வயது சிறுவனுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய கலெக்டர் உமா நடவடிக்கை
குமாரபாளையம் நான்கு வயது சிறுவனுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்வதற்கான மனுவை மாவட்ட ஆட்சியரிடம் சிறுவனின் பெற்றோர் அளித்தனர்.
நான்கு வயது சிறுவன் சிவாவிற்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய நாமக்கல் கலெக்டர் உமா நடவடிக்கை
குமாரபாளையம் நான்கு வயது சிறுவன் சிவாவிற்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய நாமக்கல் கலெக்டர் உமா, உடனே உரிய நடவடிக்கையை மேற்கொண்டார்.
குமாரபாளையம் நகராட்சி 6வது வார்டு பெராந்தார்காடு பகுதியில் வசிக்கும் சுரேஷ் (வயது 35.) கூலித்தொழிலாளி. இவரது மகன் சிவா, 4 வயது சிவாவிற்கு தொண்டையில் கட்டி இருப்பதால் அதனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்காக மருத்துவ காப்பீடு அட்டை பெறுவதற்காக, குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் ரேசன்கார்டு பதிவு செய்து 1 வருடத்திற்கு மேலாகியும் ரேசன்கார்டு வரவில்லை. இது குறித்து சிறுவனின் பெற்றோர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலர் காமராஜ், மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ராவிடம் புகார் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. சிறுவனின் அப்பாவை கலெக்டர் உமா நேரில் வர சொல்லி விபரம் கேட்டறிந்தார். காப்பீடு அட்டைக்கு ஏற்பாடு செய்கிறேன், நீங்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையை செய்யுங்கள். நாங்கள் மருத்துவமனையில் கூறி விடுகிறோம், என்று கலெக்டர் கூறியதுடன், உடனடியாக அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தார்.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறுவனின் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய, சிறுவனை மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். புகாரினை ஏற்று உடனடியாக மருத்துவ தீர்வினை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவிற்கு சிறுவனின் குடும்பத்தார், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் நன்றி தெரிவித்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu