நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.
குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டார்.
கொமாரபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நுண் உரம் செயலாக்க மையத்தில் மாவட்ட கலெக்டர் உமா ஆய்வு மேற்கொண்டு, மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை தரம் பிரிக்கப்படுவதையும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட கழிவுகளிலிருந்து நுண் உரம் தயாரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, குமாரபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் தாசில்தார் சண்முகவேல், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து நகராட்சி கமிஷனர் குமரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காவிரி ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு, தினசரி 7.20 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, பொதுமக்கள் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 50 லிட்டர் வீதம் தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது நிலவி வரும் மிக கடுமையான கோடை வெப்பம் காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. எனவே, நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரை, பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் கொண்டு உறிஞ்சுவது, கண்டறியப்பட்டால், மின் மோட்டாரை பறிமுதல் செய்வதுடன், குடிநீர் உப விதிகளின்படி, அபராதம் விதிக்கப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே கோடை காலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu