பள்ளிபாளையத்தில் சளி,காய்ச்சல் பரிசோதனைகள் தீவிரம்

பள்ளிபாளையத்தில் சளி,காய்ச்சல் பரிசோதனைகள் தீவிரம்
X
பள்ளிப்பாளையத்தில், கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிய, தினந்தோறும் வீடுவீடாக சளி காய்ச்சல் பரிசோதனை தீவிரமாக நடைபெறுகிறது!

நாமக்கல் மாவட்டம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக தமிழக அரசால் குறிப்பிடபட்டுள்ளது. இதையடுத்து, நோய்த்தடுப்பு பணிகளை, மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

அவ்வகையில், பள்ளிபாளையத்தில் நகராட்சி மற்றும் மருத்துவக்குழுவின் சார்பில் வீடுவீடாக சளி, காய்ச்சல் யாருக்கேனும் உள்ளதா வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கை மேலும் அவர்களின் பல்ஸ் அளவு ஆகியவற்றை கணெக்கெடுத்து வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பள்ளிபாளையத்தில் தொற்று பரவல் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ளும் வகையில், இது போன்ற பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!