குமாரபாளையம் அன்பு கல்லூரியில் நாணயம் மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி

குமாரபாளையம் அன்பு கல்லூரியில் நாணயம் மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி
X

குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் நாணய கண்காட்சி மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே அன்பு கல்லூரியில் நாணயம் மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே அன்பு கலை, அறிவியல் மற்றும் நர்சிங் கல்லூரியில் நாணய கண்காட்சி மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுப்ரமணி, நர்சிங் கல்லூரி முதல்வர் ஹேமலதா தலைமை வகித்தனர். நாணய கண்காட்சியை குமாரபாளையத்தை சேர்ந்த தாமரைராஜ் என்ற பொறியாளர் நடத்தி மாணவ, மாணவியர்களுக்கு பழங்கால நினைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் 120 நாடுகளுக்கு மேற்பட்ட நாணயங்கள், பணத்தாள், அஞ்சல் தலை, அஞ்சல் அட்டை, ஆங்கிலேயர் கால பத்திரங்கள், நாணயங்கள், போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி, கேடயங்கள், பழைய விளக்குகள், பழைய டூவீலர்கள், உள்ளிட்ட பல பழமையான பொருட்கள் காட்சி படுத்தப்பட்டு இருந்தன. இவைகள் குறித்து தாமரைராஜ் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்.

Tags

Next Story